திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக அலகிற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பம் செய்திடும் பொருட்டு, தகுதியான நபர்களிடமிருந்து 03/02/2024 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணி நியமன வகை | நேரடி நியமனம் |
பணியின் தன்மை | அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவி செய்தல் |
ஊதியம் | ஊதிய படிநிலை 1(1) ன் படி தர ஊதியம் ரூ.15,700 (ரூ.15,700 - ரூ.50,000) மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர படிகளும் |
வயது | 01/07/2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் |
வகுப்பு | அதிகப்பட்ச வயதுவரம்பு (01/07/2023 அன்று உள்ளவாறு) |
(i) பொது | 32 வயதிற்குள் |
(ii) பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் | 34 வயதிற்குள் |
(iii) ஆதிதிராவிடர் / பழங்குடியினர் | 37 வயதிற்குள் |
(iv) முன்னாள் ராணுவத்தினர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்) | 55 வயதிற்குள் |
(v) மாற்றுத்திறனாளிகள் | வயது உச்சவரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் |
கல்வித்தகுதி :-
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (தமிழ்நாடு அடிப்படை பணிக்கான சிறப்பு விதிகள் பிரிவு 19 விதி 5(2) (a))
சிறப்புத்தகுதிகள்:-
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம்:-
இப்பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசி நாள் - 03/02/2024 - பிற்பகல் 5.45 மணிவரை .
நிபந்தனைகள்:-
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து அனுப்பவேண்டும்.
2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்திசெய்து அனுப்பப்பட வேண்டும்.
3. விண்ணப்பதாரர் கல்வித்தகுதி குறித்த சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவை சுய சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
4. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்தந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 03/02/2024 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
5. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
7. எந்த ஒரு விண்ணப்பத்தினையும் நிராகரிக்கும் அதிகாரம் நியமன அலுவலருக்கு உண்டு.
8. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள் நேர்காணல் கடிதம் மூலம் தனியே அனுப்பிவைக்கப்படும்.
9. முன்னுரிமை பெற்றவர் பணியிடங்களுக்கு அரசாணை நிலை எண்.122. மனிதவள மேலாண்மைத் (கே2) துறை, நாள் - 2/11/2021 ன் படி, முன்னுரிமை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
10. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண்.303. நிதி(ஊதியக்குழு) துறை, நாள் 11/10/2017, அரசாணை எண்.305. நிதி(ஊதியக்குழு) துறை, நாள் 13/10/2017 மற்றும் அரசாணை எண்.306. நிதி(ஊதியக்குழு) துறை, நாள் 13/10/2017 ன் படி ஊதியம் (ரூ.15,700 - ரூ.50,000) மற்றும் அனுமதிக்கப்பட்ட இதரப்படிகளும் வழங்கப்படும்.
Sample:-